பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஆங்கிலத்தில் எழுதிய, ‘ஏ பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். பிரபஞ்சத்தின் இயல்பை கண்டறிவதில் உள்ள முன்னேற்றத்தை கூறுகிறது.
பிரபஞ்சம் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை தருகிறது. பிரபஞ்சம் எப்படி உருவானது. அது எங்கிருந்து வந்தது; எங்கே போய்க் கொண்டிருக்கிறது. இது பற்றிய சிந்தனையின் சாராம்சம் என்ன போன்ற கேள்விகளுக்கு, நவீன அறிவியல் ரீதியாக விடை தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் பற்றிய இயற்பியல் கோட்பாடுகள், புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்த தகவல்களும் விளக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைவூட்டுகிறது. எளிய நடையில் பிரபஞ்சம் பற்றி தெளிவு ஏற்படுத்தும் அறிவு நுால்.
–
அமுதன்