பதினெண் கீழ்கணக்கு நுால்களான திரிகடுகம் மற்றும் முதுமொழிக்காஞ்சிக்கு எழுதப்பட்டுள்ள உரை நுால். நல்லாதனார் இயற்றிய திரிகடுகம், மருத்துவப் பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலியின் மருத்துவ குணங்கள் நோயைத் தீர்ப்பது போல, மூன்று கருத்துகளில் தொகுக்கப்பட்டது. இரு நுால்களிலும் தலா 100 பாடல்களிலும் அறக்கருத்துகள் செறிந்து உள்ளன.
இவற்றுக்கு முன் எழுதியுள்ள உரைகளை பார்வை நுாலாகக் கொண்டு, இந்த உரை நுால் எழுதப்பட்டுள்ளது. பாடல்களுக்கான பொருளுரையை முதலில் கூறி, அதற்குரிய பொழிப்புரையுடன் இறுதியாக கருத்து விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பு பகுதியில் இலக்கணக் குறிப்புகளையும் அளித்துள்ளார். அருஞ்சொற்பொருள் அகராதியும் அளிக்கப்பட்டுள்ளது. திரிகடுகம் மற்றும் முதுமொழிக்காஞ்சியை படிக்க விரும்புவோருக்கு உதவும் உரை நுால்.
–
முகில் குமரன்