இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமண்யத்தின் நாவல் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். செறிவான அனுபவங்களில் உலகளாவிய பார்வையைப் பகிர்ந்துள்ளது. நாவல் இலக்கணம் பற்றி விரிவான முன்னோட்டம் தந்து, கைதேர்ந்த நாவலாசிரியர்களின் பார்வையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழில் முதன்முதலில் நாவல் எழுத்தை துவங்கி வைத்தவர் வீரமாமுனிவர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் நாவல் வடிவத்தின் துவக்க கால வளர்ச்சியை விளக்கி, இந்தியாவில் நாவல் தோன்றிய காலத்தில் பல்வேறு மொழி சார்ந்த நாவலாசிரியர்கள் வேற்றுமொழி இலக்கியங்களைத் தழுவியும், தன் போக்கிலும் உருவாக்கிய வரலாறு தரப்பட்டுள்ளது.
நாவல் வடிவங்கள், கதை அமைப்பு, தமிழில் கதை சொல்லும் கலையை முன்வைத்து நாவல் எழுத்து வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய எழுத்தாளர்களின் உத்திகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நாவல் இலக்கணத்தை சிறப்பாக விளக்கும் நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு