சமஸ்தானங்களாக பிளவுபட்டு கிடந்த குறுநிலங்களை இணைத்து இந்தியாவாக உருவாக்கிய மகத்தான மனிதர் வல்லபாய் படேல் சந்தித்த சங்கடங்களையும், சிறைவாசத்தையும், போராட்டங்களையும் மிகத் தெளிவாகச் சொல்லும் நுால்.
ஆடிக்கறந்த மாட்டையும், பாடி பறந்த குயிலையும், தடிகொண்டு தாக்கிய சிலரையும் சாம பேத தான தண்ட முறைகளை கையாண்டு, அத்தனை சமஸ்தானங்களையும் ஒன்றாக்கி காட்டிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். அவருக்கு வாய்ப்பு கிடைத்து இருந்தால், பாதி இணைத்த காஷ்மீரையும் முழுதாகவே இணைத்து இருப்பார்.
இளைஞர்களின் சுதந்திர வேட்கையையும், துணிச்சலையும் வளர்க்கும் விதத்தில் எழுதப்பட்ட உண்மை வரலாறு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்