கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து, அவரது பல்வகைப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி விளக்கம் தரும் நுால். சமூகத்தில் புரையோடியுள்ள அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமை கொடுமை போன்ற பொருண்மைகளில் உள்ள பாடல் சாரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கவிதை புனைந்த கல்யாணசுந்தரத்தின் வறுமையான இளமைக்காலம், கவிதை ஈடுபாடு, குயில் பத்திரிகையில் பணியாற்றியது, பாரதிதாசன் தலைமையில் நடந்த திருமணம், திரைப்பட வாய்ப்புகள் பெற்ற விதம் போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
கவிதை வரிகளில் விரிந்த பட்டறிவு, சமூகத்தின் மீதான ஈடுபாடு போன்றவற்றைக் காணமுடிகிறது. நல்லதொரு இயற்கைக் கவிஞராக உயிரினங்களோடு உரையாடி கவிதை வார்த்துள்ளார். நாடக நடிகராக அவர் விளங்கிய தகவலும் விவரிக்கப்பட்டுள்ளது.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு