ஏழைகள் மற்றும் இயலாதவர்கள் வலியை எளிய நடையில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். சொற்களை சிக்கனமாக பயன்படுத்தி, கனத்த உணர்வை வெளிப்படுத்துகின்றன. தொகுப்பில், 44 கவிதைகள் உள்ளன. முதலில், ‘அவன்தான் மனிதன்’ என்ற தலைப்பில், உழுதான் விதைத்தான் அறுத்தான் கொடுத்தான் அழுதான் செத்தான்...’ என உழைப்பின் வலியை நுட்பமாக பதிவு செய்கிறது, அதற்கு வரையப்பட்டுள்ள ஓவியம் ஆயிரம் பொருளை அள்ளித்தருகிறது.
குறுங்கவிதைகளும், நெடுங்கவிதைகளும் நிறைந்துள்ளன. அனைத்தும் மனிதனின் வலியை பேசுகிறது. அப்பா என்று ஒரு நெடுங்கவிதை மிக அற்புதமாக புனையப்பட்டுள்ளது. உழைத்து வாழும் ஒரு தந்தையை, முழுமையாக உருவகப்படுத்தி, நெகிழ வைக்கிறது. கவிதைகளுக்கு பொருத்தமான ஓவியங்களும் வரைந்து சேர்க்கப்பட்டுள்ளன. மனதின் அடியாழத்திலிருந்து பிறந்துள்ள உணர்வுகளின் தொகுப்பு நுால்.
–
மலர்