தமிழிலக்கியங்களில் பொதிந்த அக, புற வாழ்வியல் கருத்துகளை கொண்டுள்ள நுால். தொல்காப்பியம், பழமொழிகள், சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர் பாடல்கள், திருமூலம், புறநானுாறு, நாட்டுப்புற விடுகதைகள் போன்ற பல தமிழிலக்கியங்களில் காணப்படும் அறிவியல் சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களில் வெளிப்படும் வாழ்வியல், வானவியல், மருத்துவம், தாவரவியல் கருத்தியல்களும் மேற்கோள்களோடு ஆய்ந்து முன்வைக்கப்பட்டுள்ளன.
பண்டைய இலக்கியங்களில் உணவுப்பொருட்கள், நறுமணப்பொருட்கள் பற்றிய விவரங்களும் உள்ளன. சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளும் தரப்பட்டுள்ளன. பல்துறை சார்ந்த சிந்தனைகளை உள்ளடக்கிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு