நகரத்தார் சமூகம் பற்றி விரிவாக ஆய்வு செய்து தகவல்களை தொகுத்துள்ள நுால். பொருத்தமான படங்களுடன் விளக்கமாக படைக்கப்பட்டு உள்ளது. துவக்கத்தில் நகரத்தார் சமூக மக்களின் வசிப்பிட பண்பாட்டை கூறும் படங்கள் இடம் பெற்றுள்ளன. பிரமாண்டமாக, அதே நேரம் பயன்படுத்த ஏற்ற வசதி மிக்க வீடுகள், அவற்றின் உள்ளறைகள், துாண்கள், பயன்பாட்டு பொருட்கள், வீட்டின் அமைப்புகள் என ஆர்வத்தை துாண்டும் வகையில் உள்ளது. இது படிப்பதற்கான ஆர்வத்தை துாண்டி வாசலை திறந்து விடுகிறது.
தொடர்ந்து, நகரத்தார் சமூக பண்பாட்டு கட்டுமானம் குறித்து ஆய்வு செய்து திரட்டப்பட்ட தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மிகவும் வித்தியாசமான பின்புலத்தில் அவை அமைந்துள்ளன. வளர்ச்சியை நோக்கி இந்த சமூகம் எழுந்த விதம் வியப்பை ஏற்படுத்துகிறது. நகரத்தார் சமூக மக்களின் பண்பாட்டு சிறப்புகளை ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கும் நுால்.
–
மலர்