தெளிவான அச்சு அமைப்பில் வெளிவந்துள்ளது கலித்தொகை நுால். சங்க இலக்கியங்களில் முதன்முதலாக, 1887ல் பதிப்பிக்கப்பட்டது கலித்தொகை. சென்னை மாநிலக் கல்லுாரி தமிழ்ப்பண்டிதர் இ.வை.அனந்தராமையர் எழுதிய மேற்கோள் மற்றும் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியானது. அது, நவீன அச்சு அமைப்பில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நுாலை திணைக்கு ஒருவரென ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர். கலிப்பா செய்யுட்களைக் கொண்டது. ஐவகை நிலச் செய்திகள், நாடகக் காட்சி, காதல், வழிபாடு, ஏறு தழுவல், தலைவன் – தலைவி உரையாடல், நகைச்சுவை மற்றும் அறநெறி கருத்தும் காணப்படுகிறது.
இந்த பதிப்பை பாராட்டி, உ.வே.சாமிநாதையர், இரா.இராகவையங்கார் வழங்கிய மதிப்புரைகளும் இடம் பெற்றுள்ள இந்த நுால், 97 ஆண்டுகளுக்கு பின் கணினி அச்சு பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
–
கோதனம் உத்திராடம்