எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்த கிருத்திவாசன் வாழ்க்கை வரலாற்று நுால். வறுமையால் பள்ளிக்கல்வியைத் தொடர்வதில் எதிர்கொண்ட போராட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பின்னாளில் பள்ளியையே நிர்வாகம் செய்யும் நிலைக்கு உயர்ந்தது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
சித்தாளாகப் பணியாற்றி பிற்காலத்தில் தேர்ந்த கட்டுமானத் தொழிலதிபராக உயர்ந்தது மட்டுமன்றி, ஏற்றுமதி தொழிலிலும் சாதனைகள் செய்து, தன்னைச் சேர்ந்தவர்களுக்கு பேருதவி செய்ததும் நினைவுகூரப்பட்டுள்ளன. அரிய வரலாற்றுத் தகவல்களும் உள்ளன. மாதரசன், சென்னப்பன் எனும் இருவர் ஓங்கிஇருந்த இடமே பிற்காலத்தில் மதராசப் பட்டணம் என்ற சென்னை என்றும் பதிவு செய்து இருப்பது கவனிக்கத்தக்கது. உழைப்பவர்களால் எத்தகைய உயரத்தையும் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை தரும் நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு