தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நுால்களை இலக்கியவகை அடிப்படையில் தொகுத்துள்ள நுால். தமக்கு கிடைத்த நுால்களையும், சேகரித்து வைத்துள்ள காலச்சுவடு, திசை எட்டும், தீரா நதி, புது எழுத்து இதழ்களில் வந்த மதிப்புரைகளிலிருந்தும், சில நுால்களின் முன்னுரையில் இருந்தும், அணிந்துரையிலிருந்தும் திரட்டிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மொழியியலும் மொழிபெயர்ப்பும், மொழிபெயர்ப்பு இலக்கியம், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பாளர்கள், வெளிநாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு சிந்தனைகள் போன்ற தலைப்புகளில் அமைந்துள்ளது.
மொழிபெயர்ப்பு தகவல் களஞ்சியமாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
–
ராம.குருநாதன்