‘வந்ததா தைப் பொங்கல்’ துவங்கி, ‘கொரோனா’ வரை 114 தலைப்புகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். உள்ளத்திலிருந்து எழும் உணர்ச்சித் தழும்புகளாக உள்ளன. வரும் காலம் வெறுங்காலம் ஆகுது, ஓய்வறியா உழைப்பாளி, வள்ளுவரும் வாழ்வியலும், வாக்களிக்க வாரீர் போன்ற பொருண்மைகளில் பயனுள்ள தகவல்களை தருகிறது.
பொங்கலைப் பற்றி என்ன நிலை வந்தாலும், இயற்கை வளம் குறைந்தாலும், எங்கள் வீட்டுப் பொங்கல் இனிமையாகப் பொங்கிடும் என விழாக்களை மகிழ்ச்சியோடு கொண்டாடக் கூறுகிறது. சிங்கப்பூரின் சாலை நேர்த்தியையும், பேருந்து பயணத்தையும் பாங்காகத் தெரிவிக்கிறது. சம கால நிகழ்ச்சிகளைச் சுட்டி, தீர்வு காணும் வகையில் கொரோனாவை பற்றிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எளிய சொற்களைக் கொண்டு கவிதை எழுத முயல்வோருக்கு வழிகாட்டியாய் அமையும் நுால்.
–
புலவர். இரா.நாராயணன்