நீலகிரி மாவட்ட சிறப்புகளை தெளிவாக உரைக்கும் நுால். சுற்றுலா தலங்களைப் பற்றி எளிய ஆர்வமூட்டும் அறிமுகத்துடன், வரலாற்று நிகழ்வுகள், சூழலியல், பூர்வகுடிகளை பற்றிய சமூகப் பண்பாட்டு சிறப்பு, தொல்லியல் தகவல்கள், அரசியல் தலைவர்கள் வருகைக்கான பின்னணி, சினிமா படப்பிடிப்பு என ஆவணப்படமாக கண் முன் விரிகிறது.
பூச்சிகளை உண்ணும் தாவரம், தங்கத்தை உருக்கும் அதிசயம், நீலகிரி பெயர் காரணம், கற்கால பாறை ஓவியங்கள், கோத்தர் மக்களின், ‘ஆட்குபஸ்’ உடை, மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்ட குரும்பர், பனியர் பழங்குடிகளின், ‘பூ புத்தரி’ திருவிழா, படுகர் இன மக்களின் குல தெய்வ பண்டிகை, ஊட்டியின் அடையாளமான ஆதம் நீரூற்று, சுற்றுலா பயணியரின் உள்ளம் கவர்ந்த ஊட்டி வர்க்கி, குடிநீராக பயன்பட்ட ஊட்டி ஏரி, ஊட்டியில் கின்னஸ் பூங்கா உட்பட விஷயங்களை அள்ளித் தருகிறது. ஊட்டி தொடர்பான தகவல் களஞ்சியம்.
–
இளங்கோவன்