தொழில்நுட்பம் வளராத காலத்திலும் தனித்திறமையால் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்கள் பற்றி 160 தலைப்புகளில் விவரிக்கும் நுால். ரயில்வேயில் பணி புரிந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரஞ்சுக்காரரிடம் புரஜக்டர், படச்சுருள் பெற்று, திரைச்சீலையில் கிராமந்தோறும் திரைப்படம் ஒளிபரப்பியவர். திரைப்பட வளர்ச்சியின் ஆணிவேர் என இவரை விவரிக்கிறது.
பராசக்தி, ரத்தக்கண்ணீர் படங்களை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சுவின் பின்புலத்தை சொல்கிறது. மாநில, மத்திய அரசில் விருது பெற்ற படங்கள், பிற மொழியில் இருந்து தமிழாக மாறிய படங்களை விவரிக்கிறது.
நாவலை படமாக்கியவர்கள், கிராமிய மணத்தைச் சேர்த்தவர்கள், புதிய தொழில் நுட்பத்தை புகுத்தியவர்களை அடையாளம் காட்டுகிறது. திடீர் சறுக்கல், வானுயர வெற்றி கண்டவர்களை அடையாளப்படுத்துகிறது. திரைத்துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்