ஞானி யாஸீன் மவுலானா நாயகம் வாழ்க்கை வரலாறு மற்றும் செயல்பாடுகள் பற்றி கூறும் நுால். அவரது பொன்மொழிகளும், உபதேசங்களும் தனி தலைப்பில் எளிமையாக தொகுத்து தரப்பட்டுள்ளன.
‘வானம், அதன் மேகம், மழை, இடி, மின்னல் எல்லாம் கற்றுக் கொடுக்கவில்லையா’ போன்ற கேள்வியுடனான பொன்மொழிகளை புகட்டிய ஞானி மவுலானா நாயகம் வாழ்க்கை வரலாறு தெளிவாக தரப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் குடும்ப கிளை வாரிசு மிக அழகுற காட்டப்பட்டுள்ளது.
திருமுல்லைவாசல் ஓர் அறிமுகம் என்ற தலைப்புடன் துவங்குகிறது. தொடர்ந்து, தமிழ்நாடும் மார்க்கவியல் கல்வியும் என்பது உட்பட பல தகவல்களை தருகிறது. மவுலானா நாயகம் செய்த திருமணங்கள், அவரது ஆக்கங்கள், நிகழ்த்திய அற்புதங்கள் பற்றி எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சிறப்பாக வாழ்ந்து ஞானம் பெற்றவரின் வாழ்க்கையை உரைக்கும் நுால்.
–
மதி