ஹைக்கூ கவிதைக்கும், இயைபுக்கூ கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தை கூறியுள்ள நுால். ‘இயைபுக்கூ’ என்ற புதுச் சொல்லின் பொருளைக் கூறுகிறது. 200 கவிதைகளில் புதுமைகள் இடம் பெற்றுள்ளன. மூன்று வரிகளில் முத்தான கருத்துகளைக் கூறுகின்றன.
சிலந்தி வலை பூச்சிகளின் தற்கொலை, ஆனால் அது அழகாய் பின்னப்பட்ட கலை என்ற வார்த்தைகளின் வர்ணஜாலம் கவிதைகளில் பளிச்சிடுகின்றன. வண்டின் முகம் மலரவும், மீன் துள்ளிக் குதிக்கவும் காரண காரியங்களை கவிதையில் வடித்திருப்பது கற்பனைத் திறன் சொற்களில் தெரிகிறது.
மெட்டுக்குப் பாட்டெழுதி, சமுதாயத்தைப் பாழ்படுத்தும் கவிஞருக்குக் கிடைத்தது திட்டு என்ற கவிதையில் சமுதாய நலன் தெரிகிறது. ஆத்திசூடியும் வள்ளுவரின் உள்ளமும் வரிசையாய் வலம் வருகிறது. புதுக்கவிதை எழுத முயல்வோருக்கு பயன்படும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்