பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பர். இவரது நண்பர் எதிரொலி விஸ்வநாதன். இவர் எழுதிய நான்கு நுால்களுக்கு, எழுதப்பட்டுள்ள அணிந்துரைகளின் தொகுப்பு நுால். அளவு கடந்த அடக்கம், தகுதியான புகழுக்கு தடையாகிவிடும் என்பது உண்மைதான். அடக்கத்தில் சிறந்தவர் நெல்லையப்பர். அவரைப் போன்றவர் தான் எதிரொலியார் என்று சுட்டிக் காட்டி, ‘தம்பி நீ வாழ்க’ என்று புத்தக முகவுரையில எழுதப்பட்டுள்ளது.
‘பாவேந்தர் போற்றும் பாரதி’ என்ற புத்தகம் பாரதிதாசனை பற்றியது. முந்தைய நாளில் கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று முழங்கிய பாவேந்தர், ராமாயணத்தை இசை பாடல்களாக பாடியவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாரண.துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் டி.கே.எஸ்., சகோதரர்களால் நடிக்கப்பட்டது. இது, உலகிலேயே தலை சிறந்த நாடகம் என்று பிரான்ஸ் பத்திரிகையால் கவுரவிக்கப்பட்டது சிறப்புச் செய்தி.
– சீத்தலைச் சாத்தன்