காவல் துறை அதிகாரி, கண்ணியமாக எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். நேரில் பார்த்தவற்றை உள்ளக் கிடக்கை யுடன் கலந்து நேர்மையாக கவிதை வழியில் சிந்தனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பு நுால், மூன்று பெரும் பிரிவுகளாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனித்தலைப்பு தரப்பட்டுள்ளது. நாட்டு நலன், மக்கள் நலன், காதல் நலன் என பிரிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த தலைப்புகளின் கீழ், பொருத்தமான கவிதைகள், எளிதாக புரிந்து கொள்ளும் சிறு தலைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளன.
இயல்பு மிக்கதாக மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் மொழியில் முகிழ்த்துள்ளது. காவல் துறை அதிகாரியின் சிந்தனையாக பிறந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
–
மதி