கதை, கட்டுரை, கவிதை என பல வடிவங்களில் கருத்துகளை தெரிவிக்கும் நுால். அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி குறிப்பிட்டு, இதற்கு யாரெல்லாம் துணைபோகின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது. சொந்த அனுபவங்கள், சமூக சுரண்டல் குறித்தும் கூறியுள்ளது.
குட்டிக்கதைகள் பல உள்ளன. அவற்றில், தற்கால போக்குகள் குறித்து விளக்கி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. மொத்தமாக 94 தலைப்புகளில் சுவாரஸ்ய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கருத்துகள், கம்யூனிஸ்ட்கள் பற்றிய செய்திகள், அரசியல், ஆன்மிகம் என பல தலைப்புகளில் விளக்கம் கொடுத்துள்ளார். இதில், ‘ஒரு துளி விசம்’ கட்டுரை தனிச்சிறப்புடையது. காரல் மார்க்ஸ், பிடல் காஸ்ட்ரோ, சே குவாரா, மாயா ஏஞ்சலோ, அம்பேத்கர் பற்றியும் பேசியுள்ளது. தகவல்களை எண்ண ஓட்டத்திற்கு ஏற்றபடி சிறுகதை, கவிதை, செய்தி என அடுக்கி அளித்துள்ளது நல்ல முயற்சி. தற்கால நிலைமையை விளக்கும் நுால்.
–
முகில்குமரன்