கனவுகளை பகுத்தாய்வது பற்றி உளவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். உடல், உள்ளம் சார்ந்த நலத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இரண்டுக்கும் உள்ள உறவை ஆராய்கிறது.
‘உடலும் உள்ளமும்’ என துவங்கி, ‘கனவுகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்பது வரை, 18 அத்தியாயங்களில் கருத்துகளை கொண்டுள்ளது. மனதின் செயல்பாடுகளை மிக எளிமையாக விளக்குகிறது.
கனவு காட்சிகளை தர்க்க ரீதியாக அணுகி விடை சொல்கிறது. உடல், உள்ளம் சார்ந்த நலன்களை அறிவியல் ரீதியாக விளக்குகிறது. வாழ்வு நிகழ்வின் பல்வேறு கோணங்களை கனவு செயல்பாட்டுடன் இணைத்து பேசுகிறது. கனவுகளை பொதுவாக பொருள் கொள்ள முடியாது என விளக்குகிறது. மனதின் அரிய ஆற்றலை அறிந்து முன்னேற வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால்.
–
மதி