இந்தியாவில் பல பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்துள்ள நுால். உலகில் முதல் மனிதனின் வரலாறு துவங்கி, பழங்குடியினரின் வாழ்க்கை முறை வரை மிகச் சுருக்கமாக தெரிவிக்கிறது.
இந்த புத்தகம், 10 இயல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. பெரு வெடிப்பு கோட்பாட்டை விளக்கி, உலகின் காலத்தையும், உருவான கருவிகளையும் பற்றி கூறுகிறது. பழங்குடி மக்களின் ஆரம்பநிலை பற்றிய தகவல்களை அறிவியல் ரீதியாக தருகிறது.
தொடர்ந்து, இந்தியாவில் பகுதி வாரியாக வாழும் பழங்குடியின மக்களை அறிமுகம் செய்கிறது. உணவு, உற்பத்தி முறைகள், பயன்படுத்தும் கருவிகள், கொண்டாடும் பண்டிகைகள், நம்பிக்கை என பல விஷயங்களை அலசுகிறது. பழங்குடியின மக்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஆதிவாசி மக்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் நுால்.
–
மலர்