உலக சினிமா பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். இரண்டு பாகங்களாக, 63 சினிமாக்களின் அறிமுகம் உள்ளது. பிரான்ஸ், ரஷ்யா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை கதைக்களமாக கொண்ட படங்கள், வரலாறு, நகைச்சுவை, பாசம், போராட்டம், அடிப்படை வசதிகள், கொலை, திகில் போன்ற கதைக் களத்தை மையமாக கொண்டுள்ளன. பழங்குடியினர், குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து பேசுகிறது.
போர் வன்முறை வீரர்களை என்ன செய்யும், சமூக பின்னணி எப்படி மனிதனை குற்றவாளியாக்குகிறது, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் ஏற்படும் விளைவுகளை அலசுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, சினிமாவில் பயன்படுத்தும் விதம், உலக சினிமா காட்சிகளை போல் தமிழில் வந்த படங்கள் போன்றவற்றை நினைவூட்டுகின்றன. உலக சினிமாக்களுடன், இந்திய சினிமாவை ஒப்பிட உதவுகிறது. சிறந்த உலக சினிமாவை பார்க்க துாண்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்