கவிதைகள், இனிய பக்தி பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். பொது தலைப்புகளின் கீழ் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது. முதலில் பளிச் கவிதைகள் என்ற தலைப்பில், மேன்மையான சிந்தனைகள் உள்ளன. குறைந்த சொற்களில் அரிய சிந்தனைகளை தருகிறது. ‘படபடப்பு’ என்ற தலைப்பிலான கவிதையில், ‘பட பட பட தட்டப்படும் கதவு நுழைந்தது காற்று’ என சுவாரசியம் தருகிறது. இது போல் நறுக்கு தெறித்தாற் போல் சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளன.
நெடிய வடிவிலமைந்த கவிதைகளில் ஒன்று, ‘நுாலைப்படி’ என்ற தலைப்பில் உள்ளது. மேன்மையான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அடிகள் தோறும் படி என முடிந்து, படிக்க வைக்கிறது. பக்தி பாடல்கள் தனியாக தரப்பட்டுள்ளன. ராகம், தாளத்துடன் மிகவும் இனிமையாக புனையப்பட்டுள்ளன. இனிமை தரும் கவிதை மற்றும் பாடல்கள் நிறைந்த நுால்.
– ராம்