கொள்ளிடம் ஆற்று முகத்துவாரத்தில் தேவிக்கோட்டை குறித்த வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் ஆய்வு நுால். கோட்டையைப் பிடிக்க ஆங்கிலேய படை தளபதி ராபர்ட் கிளைவ் காட்டிய ஆர்வம் போன்ற சுவாரசிய நிகழ்வுகள் உள்ளன. இது, சோழ வம்சம் கடைசியாக ஆட்சி புரிந்த இடமாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு நுால், கோட்டை அமைக்கும் முறை, தேவிக்கோட்டையின் அமைப்பு, இயற்கை வளம், சிறப்புகள் குறித்து விளக்குகிறது. தஞ்சை நாயக்கர்கள் குறித்தும், ஆட்சி எல்லை, கலைகள், வரலாற்று சிறப்புமிக்க போர்கள் குறித்த செய்திகளும் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் டச்சுக்காரர் வருகை குறித்தும் கூறப்பட்டுள்ளது.
இறுதியில் தஞ்சையில் மராட்டிய காலம், ஆங்கிலேயர் வருகை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரலாறு, ராபர்ட் கிளைவ் படையெடுப்பு போன்ற தகவல்கள் கூறப்பட்டுள்ளன. துணைநுாற்பட்டியல் மற்றும் படங்களும் அளிக்கப்பட்டுள்ளன. தேவிக்கோட்டை பற்றி அறிய உதவும் வரலாற்று நுால்.
–
முகில் குமரன்