சுதந்திர போராட்ட வீரரை சிறையில், நிர்வாணமாக தொங்கவிட்டு கசையால் அடித்தபோதும், ‘வந்தே மாதரம்’ என்ற குரலைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை என்பதை பதிவு செய்யும் நுால். இன்றைய தலைமுறைக்கு, விடுதலைப் போராட்டத் தியாகத்தை கூறுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் ஆர்யாவின் வாழ்க்கையை, 11 தலைப்புகளில் தருகிறது. கொடி காத்தவர் பற்றி தெரியும். கொடி ஏற்றியவர் என்றால் பாஷ்யம் ஆர்யா. இது வீட்டில் அல்ல; ஆங்கிலேயரின் கோட்டையில் தேசியக் கொடியேற்றி கலகம் செய்த சம்பவத்தை கூறுகிறது.
ஓவியக்கலை, சிற்பக்கலையில் சிறந்து விளங்கியதும் தரப்பட்டுள்ளது. இவர் உருவாக்கிய சிலை மற்றும் ஓவியங்களில் குறிப்பிட்டிருந்த இடங்களை பதிவு செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத் தியாகம், சிறை வாழ்க்கையை தெரிவிக்கும் நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்