மாணவர்களின் முன்னேற்றம் கூட்டு உழைப்பால் ஏற்படுவது என, விளக்கமாக எடுத்துக் கூறும் நுால். கல்லுக்குள் மறைந்திருக்கும் சிலையை, சிறு உளியால் வெளிப்படுத்துவது போன்ற செயல் என கவித்துவமாக சொல்கிறது.
ஏழு தலைப்பில் பொருளடக்கம் உள்ளது. முதலில், அறிவே ஆற்றல் கல்வியே சிறந்த செல்வம் என்ற தலைப்பில் கருத்துக்களை தருகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை கூறுகிறது. அடுத்து, குழந்தை கல்வியில் பெற்றோரின் பங்கு என்ற கருத்து குறித்து தெளிவாக பேசுகிறது. தொடர்ந்து ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்துகிறது.
திறமை எப்படி வெளிப்படுகிறது என்பது குறித்தும் பேசுகிறது. நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர், பெற்றோர், ஆசிரியருக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
–
மதி