இரண்டு அடிகளில் சுருக்கமாக எடுத்துக் கொண்ட கருத்தை கவிதையாக அளிக்கும் நுால். திருக்குறள் இரண்டு அடிகளில் வருவதைப் போன்று கவிதைகளை எழுதியுள்ளதால், இந்த வடிவம் குறட்கூ கவிதைகள் என பெயர் பெற்றுள்ளன.
பல கவிதைகள் எளிமையாக புரியும் வகையிலும், பொருளுடையதாகவும் உள்ளன. படிப்போருக்கு சோர்வு இல்லாமல் சிறு வடிவில் எழுதியுள்ளது சிறந்த முயற்சி. மனிதர்கள் துாக்கம்; கொசுக்கள் குதுாகலம் கவிதை, கொசுக்கடியால் மனிதர்கள் படும்பாட்டை இரு வரிகளில் விவரிக்கிறது. கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்கள் இன்னும் அழகூட்டுகின்றன.
–
முகில் குமரன்