கிராமிய வாழ்க்கை முறை, 1940ம் ஆண்டு காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதை விளக்கும் வகையில் அமைந்த நுால். காஞ்சிபுரம் மாவட்டம், அய்யன்பேட்டை கிராமம் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சி அதிகம் இல்லாத அந்தக் காலத்தில், எப்படி மக்கள் வாழ்ந்தனர் என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. கிராம அமைப்பில் இருந்து ஆரம்பித்து இயற்கை வளம், நீர்நிலைகள், விவசாய முறை, கோவில் அமைப்பு, திருவிழாக்கள் நடந்த முறை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக கிராம மக்களின் அன்றைய இயற்கை உணவு முறைகள் குறித்தும் பதிவுகள் உள்ளன. நெசவு, பாவு தயாரித்தல் போன்ற தொழில்களை பற்றியும் பேசியுள்ளது. அந்தக் காலத்து பணம், அளவு முறைகள், விலைவாசி விபரங்களையும் பதிவு செய்துள்ளது. கிராம வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் நுால்.
–
முகில் குமரன்