கடன் வாங்காமல் தனிமனிதன் முதல் நாடு வரை இயங்க இயலாது என உணர்த்தும் நுால். அதை இரு பக்கமும் கூர்மையான கத்தியாக எண்ணி பக்குவமாகக் கையாள எச்சரிக்கை விதைத்துள்ளது. கடன் மோசமானது என்ற எண்ணமும், தக்க சமயத்தில் உதவி கிடைக்கிறது என்றும் உலகம் முழுதும் கருத்து இருப்பதை தெளிவுபடுத்துகிறது.
கட்டுப்பாட்டுடன் கூடிய கடன் தேவையானது என உணர்த்துகிறது. கம்பெனி கடன், நகைக்கடன், வைப்பு நிதியில் வாங்கும் கடன், வருங்கால வைப்புநிதிக் கடன், ஆயுள் காப்பீட்டுக் கடன் என கடன்களைக் கையாளும் முறையை விளக்கியுள்ளது. வட்டி, ‘சிபில் ஸ்கோர்’ பற்றி பிரித்து விளக்கப்பட்டுள்ளது.
அடமானம், காசோலை, உறுதிப் பத்திரம் பற்றிய தெளிவை தந்துள்ளது. முன்னேறும் ஆர்வம் கொண்டு உழைக்க தயாராக இருப்போருக்கு உரிய ஆலோசனைகளை வழங்குகிறது. வியாபாரி, தொழில் முனைவோர் போன்றோர் தொழிலை வளர்க்க வளமான யோசனைகளை வழங்கும் நுால்.
–
முகிலை ராசபாண்டியன்