தமிழர்களின் கல்வி, உணவு முறை, விளையாட்டு, திருமண முறைகள், இறை வழிபாட்டை சான்றுகளுடன் ஆவணப்படுத்தும் நுால். தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இறை வழிபாடு, ஒரு செயலைத் துவங்குவதற்கு முன் வழிபாடு செய்யும் மரபு போன்றவை பதிவிடப்பட்டுள்ளன.
சைவம், வைணவத்துடன்’ ஆறு சமயங்கள் இருந்ததற்கான சான்றுகளை தேவாரம், திருப்புகழ், திருமந்திரம் ஆதாரங்கள் வழியாக நிறுவுகிறது. தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராக திருமூலர் விளங்கினார்; தொல்காப்பியர் காலத்திலே வடமொழி தமிழகத்தில் கலந்து இருந்தது என விளக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தோன்றிய வரலாறு, குந்தவை நாச்சியார், சேரமான் பெருமான் மதம் மாறியதாகக் கூறப்படும் நிகழ்வு போன்ற செய்திகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டு மரபை அறிய உதவும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்