தேசியம், தெய்வீகம், செந்தமி்ழுக்கு தொண்டு செய்த 50 பெருமக்களின் வாழ்வு சிற்பங்களை செதுக்கும் நுால். அறிஞர் உ.வே.சா.,வை பட்டத்து யானையில் அமர்த்தி சிறப்பித்தது, நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பூலித்தேவர், முத்துவடுகநாதர், பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை நிகழ்வுகள் பதிவிடப்பட்டுள்ளன.
நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித்துரை தேவர், அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்றிய பொன்னுசாமி தேவர், பாஸ்கர சேதுபதி, விடுதலைக்காக சிறை சென்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தளபதி சந்தானம், வல்லத்தரசு, புதுக்கோட்டை பேரரசர் வாழ்க்கை நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.
திருச்சி நகர அவைத் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர், திருச்சி நகருக்கு காவிரியிலிருந்து குடிநீர் வழங்கியது; ஆங்கிலேயருக்கு நிகராக கிரிக்கெட் கிளப் தோற்றுவித்தது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆளுமைகளின் வரலாற்றுப் பதிவு நுால்.
–
புலவர் சு.மதியழகன்