ஆசிரியர்களுக்கு கையேடாக விளங்கும் நுால். ஆங்கில மொழி இலக்கணத்தைக் கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. முதல் பாகத்தில் பெயர்ச்சொல் அதன் வகைகள், பொதுப்பெயர்கள், பொருட்பெயர்கள், இடப் பெயர்கள், கூட்டுப் பெயர்கள், தொகுப்புப் பெயர்கள் என வகைப்படுத்தி, எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
வினைச்சொல் வகைகள், எந்த இடங்களில் எந்த வகை வினைச்சொல் வரும் என்பன எளிமையாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. தொடர் வகைகள், நேர்கூற்று, அயற்கூற்று, தன்வினை, பிறவினை சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
பாகம் இரண்டில் சொற்களஞ்சியம், சொற்களை உச்சரிக்கும் முறை, சொற்களின் அசைகள், முன்னொட்டு, பின்னொட்டு, உயிரெழுத்து, இணைப்புச் சொற்கள், சொற்கள் மற்றும் தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு பயனுள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்