ஒவ்வொரு காலகட்டத்திலும், அவசியத்திற்கு ஏற்ப தகவல் தொடர்பு மாறி வருவதை அலசி ஆராயும் புத்தகம். தகவல் தொடர்பு கருத்தியல் முறைகள், மக்கள் நல்வாழ்வு அமைப்புகளில் அதன் தாக்கம், சித்தாந்தம், உத்திகள், ஆய்வு நெறிமுறைகள், ஆரம்ப கால தொடர்பு முறைகள், மேற்கத்திய கோட்பாடுகளின் தாக்கம், வைய விரிவு வலைதளத்தின் வரவு என, பத்தி பத்திகளாய் பகுத்து, புள்ளி விபரக் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளது.
உலகளவில் வெளிவரும் முக்கிய பத்திரிகைகள், தகவல் தொடர்பு சார்ந்த கலைச் சொற்கள் பட்டியல் என இதில் இடம் பெற்றுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் இதழியல் சார்ந்தவர்களுக்கு உதவும் நுால்.
– மேதகன்