சிவகங்கை சீமையின் வரலாற்றை விரிவாக தரும் நுால். சீமையின் தோற்றம், ஆளும் உரிமை, வளர்ச்சி வரலாற்றுத் தகவல்கள் கால வரிசையில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. சிவகங்கை சீமை அரசியல் களத்தில் நடந்த தந்திரங்கள், சூழ்ச்சி எல்லாம் கண்முன் நகரும் காட்சியாக உள்ளன. சரித்திரத் திரிபுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சிவகங்கை ஏலம் விடப்பட்டது தொடர்பான வரலாற்றுப் பிழை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
மன்னர்களின் ஆட்சி சிறப்பு, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுடன் ஏற்பட்ட முரண், போர்களுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் பதிவாகியுள்ளன. வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பற்றி அறிந்திராத தகவல்களைக் கூறுகிறது. கல்வெட்டு, செப்பேடு, ஓலைமுறி, பதிவேடு மற்றும் நாணயங்களை ஆய்ந்து தகவல் திரட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு