மண்ணில் சிறப்பாக வாழும் செய்திகளை, சான்றோர்களின் கருத்துகளிலிருந்து எடுத்துக்காட்டும் நுால். வள்ளுவர் கூறும் இல்லற வாழ்க்கை, கம்பன் படைத்த ராமனின் கடமையுணர்வும் காதலும் பற்றிய எண்ணங்கள், வள்ளலார் காட்டிய அருள்நெறி மற்றும் மனதை வசப்படுத்தும் அறநோக்குகள் கூறப்பட்டுள்ளன.
கபீர்தாஸ் உணர்த்தும் வாழ்வியல் நோக்கங்கள், தாகூரின் கீதாஞ்சலி கவிதை, உரைநடையில் காணப்படும் கருத்துகள், ரூமியின் கதைகள் எடுத்துரைக்கும் தத்துவங்கள், பாரதியின் கவிதா விலாசம் பற்றி பேசப்பட்டுள்ளது.
பாரதிதாசன் படைப்புகளில் காணப்படும் சமூக மேம்பாட்டு உணர்வுகளும் கட்டுரையாகியுள்ளன. நன்னோக்கு சிந்தனையை வெளிப்படுத்தும் நுால்.
–
ராம.குருநாதன்