பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பண்பு நலன்களை, தமிழக அரசியல் தலைவர்கள் பகுப்பாய்வு செய்து வகைப்படுத்தியதை தொகுத்து தரும் நூல். அரசியல் தலைவர் தேவர், அரிமா மனிதர் தேவர், ஆன்மிக ஞானி தேவர் என பொதுவான தலைப்புகளில் பகுத்து தொகுத்துள்ளது.
தேவரின் பொதுப்பணியை கட்டுரையாளர்கள் தத்தம் நோக்கில் உணர்த்தியுள்ளனர். தமிழக அரசியல் வேள்வியில் செய்த தியாகமும், போராட்டமும், இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டு விடுதலையில் வேட்கை கொண்டிருந்த அவர் தேர்தல் களத்தில் பிரசாரம் செய்யாமலேயே வென்றதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பதிவு தெரிவிக்கிறது. அரிஜன உயர்வுக்குப் பாடுபட்டதைச் சுட்டிக்காட்டுகிறது எஸ்.எஸ். ராசேந்திரன் எழுதிய கட்டுரை. ரேதாஜியின் போராட்ட இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டியதை குறிப்பிடுகிறார் வைகோ. தேவரின் ஆளுமையை பல கோணங்களில் வெளிப்படுத்தும் நூல்.
–
ராம. குருநாதன்