சுவாமி விருபாக் ஷா எழுதிய ‘புலியின் நிசப்தம்’ படித்தேன். முன்னாள் பிரதமர் ராஜிவ்; காந்தி படுகொலை விசாரணைக் குழுத்தலைவர் என்ற முறையில், இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த இனப் போராட்டத்தை நன்கு அறிந்திருந்தேன்.
அங்கு கொடூர படுகொலைகள் மத்தியில், வாழும் கலை ஆசிரியர்கள், தொண்டர்கள் மிக தைரியத்தோடு பணியாற்றி உள்ளனர். குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய அரும் பெரும் சேவை பற்றி ஆசிரியர் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
குருதேவரின் முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தலைமை ஒத்துழைத்திருந்தால், அமைதி கிடைத்திருக்கும்; பல்லாயிரம் படுகொலைகள் தவிர்க்கப் பட்டிருக்கும் என்பது தெளிவு.
இந்த நாளில், முல்லைத் தீவின் ரத்த ஆறு, குரு தேவரை ஏன் கடத்தவில்லை என்ற அத்தியாயங்கள் அற்புதமானவை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இதை எழுதிய சுவாமி விருபாக் ஷா பாராட்டுக்குரியவர்.
–
கார்த்திகேயன்