மனிதர்கள் இலக்கை அடைவதற்கான வழிகளைக் காட்டும் நுால். கிடைப்பதை விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்வது நிம்மதியைக் கொடுக்கும் என விளக்கப்பட்டுள்ளது. ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ என்பதை அழுத்தமாகக் கூறி, சமூகத்தின் அடித்தளம் குடும்பமே! என்பதை அறிவுறுத்தி உள்ளது. குடும்பத்திலிருந்து நற்பண்புகள், நல்லறிவைப் பெற்று சமுதாய பொறுப்புடன் வாழ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அக்கால கல்வி முறையைக் கூறி, தற்போது உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை கண்டிக்கிறது. கலாசார சீரழிவு, மாறிய திருமண முறைகள், தாய்மொழி சீரழிவு, கலப்படம் என இன்னல்களை பேசியுள்ளது.
கழிவு நீரால் நாசமாகும் நீர்நிலைகளை பராமரிக்க வேண்டியதன் அவசியம் கூறப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானம், மோசமான சினிமா, தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் மோசடி பற்றியும் இந்நுால் விவரித்துள்ளது. பல தகவல்களைக் கொண்ட கதம்ப நுால்.
–
முகில்குமரன்