நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால். ‘டைப் – 1’ நோய்க்கான இன்சுலின் ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை விவரிக்கிறது. நோயாளிகளின் அனுபவங்களை விவரித்துள்ளதால், நாவல் படிப்பது போன்ற உணர்வை தருகிறது. நாட்டின் முதல் சர்க்கரைக் கோளாறு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தை, 1920ல் கோல்கட்டாவில் துவக்கிய டாக்டர் ஜே.பி.போஸ் பற்றியும் எழுதியுள்ளார். சர்க்கரை கோளாறால் பாதிக்கப்பட்டவர்களின் காதல், அன்பு, சோகம், ஏமாற்றம், நிராகரிப்புகளை பதிவு செய்துள்ளது.
தற்போது தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, இன்சுலின் எடுத்துக் கொள்வதில் பல வசதிகள் வந்துள்ளன. பேன்டிங், போஸ், டாக்டர் மோகனின் தந்தை விஸ்வநாதன் என, துறையில் சாதித்தவர்களின் உழைப்பை சொல்லும் நுால் இது.
–
இளங்கோவன்