சினிமா பாடல் மெட்டுகளில் எழுதப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். சந்த நயமும், கருத்து நயமும் பின்னிப் பிணைந்து ரசிக்க வைக்கின்றன.
‘அறிவின் துணையால் இடர்களை களைந்து அடைந்திட வேண்டும் உயர்நிலை’ என்ற தன்னம்பிக்கை கருத்துடன், ‘ஆதி மனிதன் தோன்றிய போது அவலம் எதுவும் இல்லை; அறிவில் சிறந்து அறிவியல் வளர்ந்த பின் அமைதி எங்கும் இல்லை’ என்ற தத்துவம் மிளிர்கிறது.
‘மலை மீது மழை பொழிந்தால் ஓடை பெருகும்; மாநிலம் செழிக்கும்’ என்ற கவிஞன் கனவுகள் பலிக்கட்டும். மனதுக்குள் நிறையும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்