கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணத்தைத் தழுவி இயற்றப்பட்டுள்ள நுால். பாயிரம் முதலாக ஆறு காண்டங்களில் 240 கீர்த்தனை, 300 விருத்தங்களால் அமைந்துள்ளது.
கந்த புராணக் கதை நிகழ்வுகள் எதுவும் விடுபடாமல் சுருக்கமாக சொற்சுவை, பொருட்சுவை நிரம்ப மிக அழகாக எளிதில் பொருள் விளங்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் அமைந்துள்ளது. பல்லவி, சரணங்களோடு ஒவ்வொரு கீர்த்தனத்தின் ராகமும் தாளமும் சுட்டப்பட்டுள்ளன.
‘பேயாண்டிதனை வேண்டி நீ ஏண்டி தவஞ் செய்தாய், பெண்ணரசி உமையே! மாயாண்டி சுடலையில் வாழ்வாண்டி காளிமுன் வாதாடிச் சூதாடி வழக்காடினாண்டி’ என எல்லா கீர்த்தனங்களும், சொற்கட்டு மற்றும் சந்தங்கள் நிறைந்துள்ளன.
தமிழ் தாளம் போட்டு நிற்பதை காண முடிகிறது. கந்தனின் மகிமையை தமிழிசையில் கூறும் நுால். தமிழன்னைக்கு மற்றுமொரு மணி மகுடம்.
–
புலவர் சு.மதியழகன்