மொழி கற்பதை சிக்கலாக்கி, சமுதாயங்களை சிதைக்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் கருத்துகளை உள்ளடக்கிய நுால். மொழி மனிதர்களையும், சமுதாயத்தையும் இணைக்கும் அற்புத கருவி என்ற கருத்தை தெளிவுபடுத்துகிறது.
சிந்தனையாளன், குறளியம் போன்ற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. எல்லாவற்றுக்கும் உகந்த மொழி கொள்கை ஆற்றலை வளர்த்து, மனிதனை முன்னோக்கி அழைத்து செல்லும் என குறிப்பிடுகிறது.
வளங்களையும், ஆற்றலையும் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
–
ராம்