தமிழ் இசையின் வளர்ச்சி வரலாற்றை விரிவாக விளக்கும் ஆய்வு நுால். இசையின் பரிணாமங்களை சொல்கிறது. தமிழ் சினிமாவில், 3,000 பாடல்களை தேர்வு செய்து, அவை உரிய ராகங்களுக்குள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு திரைப்படப் பாடலும், தமிழ் இசையில் எந்த பண்ணில் பாடப்பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக பதிவு செய்து பட்டியலிட்டுள்ளது. சாதாரணமாக கேட்டு ரசிக்கும் பாடல்கள் இந்தந்த ராகத்தில் தான் அமைந்துள்ளதா என்ற வியப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ் இசையின் தோற்றம், பண்கள் பற்றிய விபரம், பழங்காலத்தில் தமிழ் பகுதிகளில் இசைக்கப்பட்ட கருவிகள், கலைஞர்களின் வாழ்வு பற்றி தெளிவாக, ஆய்வுப்பூர்வமாக ஆதாரத்துடன் தகவல்களை முன் வைக்கிறது.
சென்னை போன்ற நகர்ப்புறங்களில் பாடப்படும் கானா இசை போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இசை குறித்து தமிழில் வெளியாகியுள்ள முக்கிய ஆய்வு நுால்.
– மலர்