சுவாமி விருபாக் ஷா எழுதிய, ‘புலியின் நிசப்தம்’ புத்தகம் படித்தேன். இலங்கை இனப் போராட்டத்தின் போது கொடூர படுகொலைகள் மத்தியில், வாழும் கலை ஆசிரியர்கள் மிக தைரியத்தோடு பணியாற்றியிருக்கின்றனர். குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய சேவை பற்றி ஆசிரியர் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
குருதேவரின் முயற்சிக்கு, விடுதலை புலிகள் ஒத்துழைத்திருந்தால், அமைதி கிடைத்திருக்கும்; படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. புத்தகத்தில், முல்லைத்தீவின் ரத்த ஆறு, குருதேவரை ஏன் கடத்தவில்லை என்ற அத்தியாயங்கள் அற்புதமானவை. இது, சரித்திர முக்கியம் வாய்ந்த நுால்.
–
கார்த்திகேயன்