செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனின் வரலாற்றை விவரிக்கும் கதைப்பாடல்களுடன் முற்றிலும் மாறுபட்ட வரலாற்று ஆய்வுக் குறிப்புகளை கொண்டுள்ள நுால். கதைப்பாடல்கள், தேசிங்கு ராஜனின் வீரம், விவேகம், பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன.
செஞ்சியின் நாடு மற்றும் நகரச்சிறப்புகளில் துவங்கி, டில்லி பாராசாரி குதிரையின் வரவு, தேசிங்கு ராஜன் குதிரையை அடக்கிக் காட்டிய தீரம், நவாப் மகளோடு திருமணம், முடிசூட்டல் என சம்பவங்கள் எளிய பாடல்கள் வழியாக கூறப்பட்டுள்ளன.
பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ள தகவல்களை வரலாற்றுக் குறிப்புகளோடு ஒப்பிடும்போது கதைப்பாடல்களுக்கு முரணான மாறுபட்ட தகவல்கள் காணப்படுகின்றன. செஞ்சி ராணி மறைவை ஒட்டியே, ராணிப்பேட்டை என்ற ஊர் அமைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. வரலாற்று ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு