சுதந்திரத்துக்கு பின், காங்கிரசுக்கு மாற்றாக, ‘பாரதிய ஜனசங்கம்’ என்ற அமைப்பை துவக்கிய டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி வாழ்க்கை வரலாற்று நுால்.
கோல்கட்டாவில் பிறந்தது, இங்கிலாந்தில் சட்டம் பயின்று, கோல்கட்டா பல்கலை துணைவேந்தரானது உட்பட விபரங்கள் உள்ளன. நேரு தலைமையிலான அரசில் நிதி அமைச்சராகி கருத்து வேறுபாடால் விலகி, பாரதிய ஜனசங்கத்தை தோற்றுவித்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
வங்கத்தில், 1943ல் ஏற்பட்ட பெரும் பஞ்சம் பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளது. கோல்கட்டா படுகொலை சம்பவமும் தெளிவாக உள்ளது. மேற்கு வங்கத்தின் சிற்பியாக பணியாற்றியதும் கூறப்பட்டுள்ளது.
கட்சித் தலைவராக பணியாற்றியதையும், பார்லிமென்ட் சென்ற நிகழ்வுகளையும் விரிவாக கூறியுள்ளது. பிரஜா பரிஷத்தின் ஜம்மு போராட்ட நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் 15 தலைப்புகளில் பதிவாகியுள்ளன.
–
முகில் குமரன்