உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடை பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது, எல்லாருக்கும் ஏற்றது. நலமுடன் வாழ அது எவ்வாறு \உதவுகிறது என விளக்கும் நுால்.
மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் என உடல் உறுப்புகள் அனைத்தையும், மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உடற்பயிற்சி அவசியம்.
நடை பயிற்சி, உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும் தந்து சிறப்பாகச் செயல்பட வைக்கும். உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் உதவுவது நடை பயிற்சி என உரைக்கும் நுால்.
–
வி.விஷ்வா