மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அடிப்படையான கேள்விக்கு விளக்கம் தரும் நுால். மனிதன் பிறந்து, வளரும்போது இறுதிவரை கடைப்பிடிக்கும் சடங்குகளின் தன்மைகளை ஆராய்ந்து உண்மை தரப்பட்டுள்ளது. சடங்குகள் யாவும் சிலர் பிழைப்புக்காக வந்தவை என்றும், இறந்தபின் மீண்டும் பிறவேன் என்ற கருத்தையும் தெளிவாக வலியுறுத்துகிறது.
ஒரு தடவை வந்த செயல் மீண்டும் வராது என்ற உண்மையை தெளிவுபடுத்துகிறது. மனிதப் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, வேலை எனத்துவங்கி, 19 தலைப்புகளாக வகுத்து பிரித்து கருத்துகள் தெளிவாக தரப்பட்டுள்ளன.
தாயையும், தந்தையையும் முதுமைக் காலத்தில் காப்பாற்ற வேண்டிய கடமையை தீவிரமாக வலியுறுத்தியுள்ளது. சிறந்த மனிதனாக வாழ தேவைப்படும் நெறிமுறைகளையும், கோட்பாடுகளையும் தெளிவாக வலியுறுத்தும் நுால்.
–
வி.விஷ்வா