சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட வரலாற்றை ஊகங்களின் அடிப்படையில் தற்கால மொழி நடையில் புனைந்து தரப்பட்ட நாவல்.
மர்மமாக விளங்கும் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் புனைகதை வாயிலாக ஆராய்ந்துள்ளது. சரித்திர நாவல் போன்று புனையப்பட்ட கதைப் பாத்திரங்களின் உரையாடலோடு பின்னிப் பிணைந்துள்ளது.
ஆதித்த கரிகாலனின் கொலை பற்றி புது பூச்சுடன் வழங்கியுள்ள விதம் சுவை குன்றாமல் உள்ளதை காண முடிகிறது. ஆதித்த கரிகாலன் கொலையுண்டதாகக் குறிப்பிடும் இடங்களில் விறுவிறுப்பு தெரிகிறது.
நாவல், 10ம் நுாற்றாண்டு வரலாற்று களம் என்ற போதும் காலத்துக்கேற்ப மாற்றிக் கதை சொல்வதில் கடும் உழைப்பு தெரிகிறது. உரையாடல்கள் அனைத்தும் புரியும் நடையில் அமைந்திருப்பது சிறப்பு. வழமையான காட்சிகளுக்கு ஏற்ற உரையாடல்கள் அமைந்துள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு