சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தம் நிறைந்த பாடல்களால் நெடுங்கதையாக படைக்கப்பட்டுள்ள நுால். உவமானமும், உவமேயமும் அங்கங்கே துள்ளி விளையாடுகின்றன. ‘காப்பு வளையலைப் போல வட்ட வடிவத்தில் வெண்ணிலாவும் சோப்பு நுரையினைப் போல முகிலும் துணை இன்றி அலைகையிலே’ என்பது போன்ற விரும்பத்தக்க வர்ணனைகள் உள்ளன.
‘செவிட்டுக் காதில் யாழின் ஓசை சிறிதும் இன்பம் பயத்திடுமோ’ என்பது போல சிந்தனைகள் நிறைந்துள்ளன. புரிந்து செயல்படாததால், இடையில் குறுக்கிட்ட கயவர்களால் சிதைந்த காதலை கவிச்சிற்பமாக செதுக்கியுள்ள நுால்.
–
சீத்தலைச் சாத்தன்